Spread the love

கோயம்புத்தூர் ,டிச3

மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியும் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவானந்தா காலனியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. செயல்படாத தி.மு.க. அரசை தூக்கத்தில் இருந்து எழுப்பவே இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் கோவைக்கு என்ன நன்மை கிடைத்தது. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? அதனால் மக்கள் பெற்ற பலன்கள் ஏதாவது உண்டா என்று கேட்டால் ஒன்றுமே கிடையாது.

அரியலூர் மாவட்டத்தில் ஒரு அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கும், ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு.

ஒரு கார்ப்ப ரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டு கால அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்து சாதனை படைத்தோம். வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க.வைபற்றி பேசுவதற்கு தகுதி வேண்டும். தற்போதைய முதலமைச்சருக்கு எங்கள் கட்சியை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. கோவையில் குடிமராமத்து திட்டம், உயர்மட்ட பாலங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் அள்ளி வழங்கியது அ.தி.மு.க. ஆட்சிதான். அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?நாங்கள் கொண்டு வந்ததை தான் நீங்கள் திறந்து வைக்கிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களில் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகிறார் மு.க. ஸ்டாலின். கோவை புறக்கணிப்பு வெள்ளலூரில் பஸ் நிலையம் கொண்டு வந்து 50 சதவீத பணிகள் முடிந்தது. அது அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதால் வேறுபகுதிக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக வெள்ளலூர் பஸ் நிலையத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். அதை தி.மு.க அரசு கைவிட வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது 520 வாக்குறுதிக ளை அள்ளிவீசினார். அதில் எதையும் நிறைவேற்ற வில்லை. சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி அவதிக்கு உள்ளாக்கி விட்டனர். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும். மாதந்தோறும் சிலிண்டர், கட்டுமான பொருட்கள் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு மக்கள் வாங்குகிற அளவுக்கு குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியை யும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

தமிழகம் முழுவதும் போராட்டம் எனவே மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றம் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு சென்ற ஒருவர் கொடுக்கும் ஆலோசனையை காவல்துறையினர் கேட்கக்கூடாது.

வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அங்கு போய்விடுவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளி லும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *