பெங்களூரு டிச,3
துமகூரு மாவட்டம் கெப்பூரு பகுதியில் ஒரு பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவரை, ஆசிரியர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிகறது. இதில், அந்த மாணவர் மயக்கம் அடைந்து விழுந்தார்.
இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. உடனடியாக மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், மாணவர் மயக்கம் அடைந்தது பற்றி அறிந்ததும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம், பள்ளி முதல்வர் சமாதானமாக பேசினார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பதாக பள்ளி முதல்வர் உறுதி அளித்ததால், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.