மும்பை டிச,3
கர்நாடக 1960-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. கர்நாடக ஆளுகைக்கு உட்பட்ட பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டியம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக உயர்நீதி மன்றம் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், சட்டக்குழு மற்றும் பெலகாவியில் உள்ள மராத்தி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட பா.ஜனதாவை சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல், முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த சம்புராஜ் தேசாய் ஆகிய 2 அமைச்சர்களைமராட்டிய அரசு நியமித்துள்ளது.
மேலும் இவர்கள் 2 பேரும் இன்று கர்நாடகாவில் உள்ள சர்ச்சைக்குரிய பெல்காவி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த பயணத்தின்போது அவர்கள் பெலகாவியில் உள்ள மத்தியவர்த்தி மகாராஷ்டிரா ஏகீகரன் சமிதி அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருந்தனர். இந்த ஆலோசனை மூலம் எல்லைப்பிரச்சினைக்கு தெளிவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தநிலையில் மராட்டிய அமைச்சர்களின் பெலகாவி பயணம் திடீரன ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இன்றைக்கு பதிலாக 6ம் தேதி பெலகாவிக்கு செல்ல உள்ளனர். இந்த தகவலை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், “சில அம்பேத்கர் அமைப்புகள் நாங்கள் 6ம் தேதி பெலகாவியில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். எனவே அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6ம் தேதி நாங்கள் பெலகாவியில் இருப்போம்” என கூறியுள்ளார்.