Month: October 2022

ஊருணியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு.

விருதுநகர் அக், 12 காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள சின்னக்குளம் ஊருணியை தூர்வார வேண்டும் என்று மல்லாங்கிணறு, முடியனூர் பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மல்லாங்கிணறு பேரூராட்சி சின்னகுளம் ஊருணியை மேம்பாடு செய்ய…

நாகை மாவட்டத்தில் 2 நாட்களில் 35 ரவுடிகள். காவல் துறையினர் கைது.

நாகப்பட்டினம் அக், 12 தமிழகத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.…

துபாயில் திமுக அமீரக அமைப்பாளர் அன்வர் அலி தலைமையில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா!

துபாய் அக். 12 ஐக்கிய அரபு அமீரக துபாயில் இரண்டாவது முறையாக திமுக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சரை பாராட்டும் விதமாக அமீரக திமுக அமைப்பாளர் அன்வர் அலி தலைமையில் துபாய் ஏர்போர்ட் சாலையில் உள்ள நட்சத்திர உல்லாச விடுதியில்…

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை.

சிவகங்கை அக், 12 திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பால் உற்பத்தி செய்த உறுப்பினர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பாலின் அளவிற்கு ஏற்ப 1,079 உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

சேலம் அக், 12 தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா மாவட்டங்களிலும், கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று…

காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.

புதுக்கோட்டை அக், 12 புதுக்கோட்டையில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம்…

பணியை புறக்கணித்து துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் அக், 12 பெரம்பலூர் நகராட்சியில் சுமார் 200 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் இவர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தினக்கூலியாக ரூ.550 வழங்க மாவட்ட…

சமூக நல்லிணக்க மனித சங்கிலி.

நீலகிரி அக், 12 கூடலூர், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடந்த 2 ம்தேதி காந்தி ஜெயந்தி நாளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகள் அறிவித்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை…

3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு. வானொலி ஆராய்ச்சி நிலையம் தகவல்.

நாமக்கல் அக், 12 நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.…

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

மயிலாடுதுறை அக், 12 மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 113 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், இலவச வீட்டு மனைபட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர்,…