துபாய் அக். 12
ஐக்கிய அரபு அமீரக துபாயில் இரண்டாவது முறையாக திமுக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சரை பாராட்டும் விதமாக அமீரக திமுக அமைப்பாளர் அன்வர் அலி தலைமையில் துபாய் ஏர்போர்ட் சாலையில் உள்ள நட்சத்திர உல்லாச விடுதியில் கேக் வெட்டி பிரமாண்டமாக பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு கௌரவ விருந்தினராக தமிழ் நாட்டில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் அமீரகத்தில் இருந்து துபாய் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அதிகாரி உமர் அப்துல்லா, அமீரகத்தில் வசிக்கும் தமிழகத்தைசேர்ந்த தொழிலதிபர்கள் ஏஜே கமால், ஆபித் ஜுனைத், ஜாஹிர் ஹுசைன், பைரோஸ் கான், ஈமான் தமிழ் சமூக அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், சமூக சேவகி ஜாஸ்மீன், ஆடிட்டர் அனஸ், கேப்டன் டிவி கேவிஎல் கமால், தினகுரல் நிருபர் நஜீம் மரிக்கா, ஷார்ஜா ராஜா மற்றும் அமீரக திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பின் செயலாளர் ஷாநவாஸ் முன்னிலையில் சமீர், சர்புதீன், அப்துல்லா கனி, வஹீதா, எஸ்பிஎஸ் நிசாம், மீடியா அஸ்கர், மஹாதீர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து மக்கள் ஆர்ஜே சாரா இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் உட்பட அனைத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரளும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் தொண்டர்களை இதுபோன்று அரவணைத்து வழிநடத்தி கட்சிக்காக உண்மையாக உழைக்கின்ற அன்வர் அலி போன்றவர்தான் அமீரக திமுகவிற்கு தலைமை ஏற்கவேண்டும் என அமைச்சரிடம் பலர் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.