சவூதி அரேபியா அக், 13
இஸ்லாமியர்கள் சரியத் முறைப்படி பெண்கள் தம் கணவர் அல்லது ரத்த சம்பந்தமான உறவுகளுடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என உள்ளது அதை மகரம் எனக் கூறுகிறார்கள். இதனை சவுதி அரசு தவறாமல் கடைப்பிடித்து வந்தது.
இந்நிலையில் இந்த மஹ்ரம் முறையை சவுதி அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கெய்ராவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரவியா அளித்த உரையில், மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்துவதற்கான செலவு ஏற்கனவே கிட்டத்தட்ட 53 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
மேலும் ஹஜ் கடமையை நிறைவேற்றுதற்கான செலவைக் குறைக்கும் நோக்கில் பெண்கள் ஆண் துணை இன்றி ஹஜ் வரலாம் சவுதி அரேபியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வருபவர்கள் எந்த விசாவில் வந்தாலும் உம்ரா செய்யலாம். உம்ரா விசா 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உம்ராவிற்கு வருபவர்கள் சவுதி அரேபியாவில் எந்த இடத்திற்கும் செல்லலாம் அனைவருக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான செலவை குறைக்கும் நோக்கில் அரசு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.