துபாய் அக், 11
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அக்டோபர் மதம் 10 ம் தேதியில் இருந்து 5 நாட்கள் நடைபெறும் Gitex Global 2022 என்ற தகவல் தொழில்நுட்ப கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்துவைத்தார்.
இந்த தொழிநுட்ப நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார் மேலும் அவரோடு அமீரக திமுக அமைப்பாளரும் திருச்சி சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளருமான அன்வர் அலி, அமீரக மற்றும் தமிழக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் 1981 இல் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி துபாயை தொழில்நுட்பத்தின் உலகளாவிய வரைபடத்தில் சேர்த்துள்ளது. இது துபாயின் முன்னுரிமைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்றும் இது 90 நாடுகளைச் சேர்ந்த 5,000 நிறுவனங்களின் பங்கேற்புடன் இரண்டு மில்லியன் சதுர அடி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கண்காட்சியாகும். இதில் பங்கேற்கும் நிறுவனங்களில் 35 ஸ்டார்ட்அப்கள் ஒவ்வொன்றும் $1 பில்லியன் மதிப்புள்ளவை என்றும் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைமைச்சரை பாராட்டும்விதமாக இன்று அமீரக திமுக அமைப்பாளர் அன்வர் அலி தலைமையில் துபாய் ஏர்போர்ட் சாலையில் உள்ள நட்சத்திர உல்லாச விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவிலும் தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கும் தகவல் மற்றும் தொழிநுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று அமீரக திமுக அமைப்பாளர் அன்வர் அலி கூறியுள்ளார்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்தி பிரிவு.