சிவகங்கை அக், 12
திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பால் உற்பத்தி செய்த உறுப்பினர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பாலின் அளவிற்கு ஏற்ப 1,079 உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ. 15 லட்சத்து 5ஆயிரத்து 83- ஐ சங்க தலைவர் சேங்கைமாறன் வழங்கினார். விழாவில் துணைத் தலைவர் பழனியம்மாள் மற்றும் இயக்குனர்கள், பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.