சிவகங்கை அக், 9
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா மையம், காரைக்குடி வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் ராஜமோகன், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை, காரைக்குடி, தூத்துக்குடி, கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு 12 ஓவர் கிரிக்கெட் போட்டியாக நடைபெற்றது. மேலும் பரிசு கோப்பையும் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை காரைக்குடி வீல்சேர் கிரிக்கெட் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.