Spread the love

சிவகங்கை அக், 4

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி வேதியியல் துறையின் சார்பாக வேதியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் 2022-2023 என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி தலைவர் அண. லெட்சுமணன் செட்டியார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காரைக்குடி மத்திய மின் வேதியியல் கழக தலைமை விஞ்ஞானி செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எலக்ட்ரோ லூமினோசன்ஸ் தொழில்நுட்பம், பயோ சென்சார் தொழில்நுட்பம் பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.மேலும் மற்றொரு சிறப்பு விருந்தினர் சீனாவின் மின் அறிவியல் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக முது முனைவர் பட்ட ஆய்வாளர் கற்பூரரஞ்சித் நானோ தொழில்நுட்பம் குறித்து விளக்கினார். முன்னதாக வேதியியல் துறை தலைவர் சரவணன் வரவேற்றார். வேதியியல் துறை பேராசிரியர் சீனிவாசன் விருந்தினர்களை அறிமுகம் செய்்தார். முடிவில் வேதியியல் துறை பேராசிரியர் மோகன் நன்றி கூறினார். இந்நிகழ்சியை வேதியியல் துறை பேராசிரியர் புவனலோஜினி தொகுத்து வழங்கினார். வேதியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *