சிவகங்கை அக், 3 காந்திஜெயந்தியையொட்டி காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மதுக்கடைகள் மூடல் காந்திஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மதுக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள், அதை சார்ந்த உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை மூடப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி சிவகங்கை மாவட்டத்திலும் மதுக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
காரைக்குடி பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் காந்திஜெயந்தியையொட்டி நேற்று காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பார்களில் தடையை மீறி மது விற்பனை நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.