திருப்புவனம் ஜூலை, 2
திருப்புவனம் அஜித் குமார் காவல் துறை கஸ்டடியில் மரணமடைந்த விவகாரத்தில் நீதிகேட்டு தவெக நாளை ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி விஜய் உத்தரவின் பேரில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.