புதுக்கோட்டை அக், 12
புதுக்கோட்டையில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதில் 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் சென்றனர்.