புதுக்கோட்டை ஏப்ரல், 30
புதுக்கோட்டை சங்கம் விடுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லை என திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வத்தின் அறிக்கை கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தண்ணீரில் ஈகோலி என்ற பாக்டீரியா இல்லாததால் அதில் எந்த கழிவும் கலக்கப்படவில்லை. தண்ணி தொட்டி நீண்ட நாள் கழுவப்படாததால் சேர்ந்த பாசியை சில தவறாக கூறியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.