புதுக்கோட்டை ஆக, 4
புதுக்கோட்டையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக், ராமநாதபுரம் இப்ராஹிம் உள்ளிட்டோர் போதை பொருள் வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.