சென்னை ஆக, 5
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்க இளைஞர்களுக்கான தவப்புதல்வன் உள்ளிட்ட புதிய திட்டங்களை திமுக அரசு தொடங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். தற்போதைய இளம் தலைமுறையினர் திராவிட கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி விட்டதாக கூறிய அவர், தமிழகத்தை சுத்தம் செய்ய நாம் தமிழர் கட்சி ஆட்சியை கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை இளையோர் கூட்டம் உணர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.