சென்னை ஆக, 8
தமிழக மீனவர்கள் பிரச்சினையை, காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட அவர் தமிழக மீனவர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் கச்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.