நெல்லை ஆக, 8
தனித்து செயல்படும் அதிமுகவினரை சந்தித்து ஒற்றுமையை ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக சசிகலா அறிவித்திருந்தார். அதன்படி தென்காசியில் கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கினார். அம்மாவட்டத்தின் பயணத்தை நிறைவு செய்த நிலையில், நெல்லையில் வருகிற 13-ம் தேதி முதல் 19ம் தேதி வரை அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.