புதுடெல்லி ஆக, 10
பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆளுநராக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த பலரும் ஆளுநர்களாகி விட்டனர். இதை பார்த்த பொன் ராதாகிருஷ்ணன் தானும் ஆளுநராக விரும்பி கடந்த சில நாட்களாக டெல்லியில் தங்கி பாரதிய ஜனதா கட்சி மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.