சென்னை ஆக, 4
அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 30 நாட்கள் தங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்ல இம்மாதம் 22ம் தேதி, 26 ம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 26 ம் தேதியே அமெரிக்கா செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் தங்கியிருந்து முதல்வர் மருத்துவ சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.