திருச்சி ஜூலை, 30
சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். 100 கோடி நில அபகரிப்பு புகாரில் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சண்முகம், திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரஞ்சோதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.