Month: September 2022

பள்ளி கல்வித்துறை சார்பில் தடகள போட்டி.

சேலம் செப், 15 பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார குறுமைய அளவிலான தடகள போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களில் இருந்து 46க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு…

சிறப்பு மனுநீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை செப், 15 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கே.வேளூர், கரிவேடு, கரிக்கந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மநுக்களை…

உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய ஓட்டுனர்களுக்கு அபராதம்.

காஞ்சிபுரம் செப், 15 காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்…

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை.

தர்மபுரி செப், 15 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை ரத்து. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

சென்னை செப், 15 தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இந்த கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் இயல்பு நிலை திரும்பி மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி…

மனுநீதிநாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

வேலூர் செப், 15 குடியாத்தம் ஒன்றியம் பரதராமியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, துணைத்தலைவர் சாந்திமகாலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள்…

சிற்றுண்டி சமையலறை கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் செப், 15 முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதையொட்டி திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 6 தொடக்க பள்ளி…

சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்.

விருதுநகர் செப், 15 அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் உள்ள சிவானந்தபுரம் தெரு, சவுந்தரராஜபுரம் தெரு, அழகாபுரி தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் குடிநீர் குழாய் இணைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் முடிந்து 5…

சட்ட மன்ற உறுப்பினர் உள்பட 390 பேர் மீது வழக்கு.

கோயம்புத்தூர் செப், 15 கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 அதிமுக. சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்பட 390 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக. முன்னாள்…

தனது அறக்கட்டளைக்கு யாரும் தங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம். ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்.

சென்னை செப், 15 தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது சொந்த அறக்கட்டளை மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது சந்திரமுகி-2, ருத்ரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர், தனது…