Spread the love

விழுப்புரம் செப், 15

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 6 தொடக்க பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்காக திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகத்தில் சிற்றுண்டி தயாரிப்பதற்கான சமையலறை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வாகனம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த சமையலறை கூடத்தை ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து. திண்டிவனம் நகராட்சி பகுதி பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற ஹாக்கி விளையாட்டு போட்டிகளையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது துணை ஆட்சியர் அமித், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *