விழுப்புரம் செப், 4
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. அதன்படி விழுப்புரம், சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்துள்ளது. சென்னையிலும் சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.