விழுப்புரம் செப், 16
விழுப்புரம் மாவட்டத்தில் ஈராண்டு தணிக்கை மற்றும் மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நில நிர்வாக ஆணையர் நாகராஜன், நில எடுப்பு, பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, சமூகநலத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்களிடம் தங்கள் துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், முடிந்த பணிகள், நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகள், முடிந்த கோப்புகள் மற்றும் நடைமுறையில் உள்ள கோப்புகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் துணை ஆட்சியர் அமித், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.