வேலூர் செப், 15
குடியாத்தம் ஒன்றியம் பரதராமியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, துணைத்தலைவர் சாந்திமகாலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தியாகராஜன், இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் குடியாத்தம் உதவி ஆட்சியர் வெங்கட்ராமன், குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 109 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, வேளான் உபகரணங்கள், விதைகள் தொகுப்பு, வீடுகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி, தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் நன்றி கூறினார்.