வேலூர் ஜூன், 5
மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் இரண்டாவது இடத்தையும், அதிமுக வேட்பாளர் பசுபதி மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.