ராணிப்பேட்டை செப், 15
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கே.வேளூர், கரிவேடு, கரிக்கந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மநுக்களை ஆய்வு செய்து 168 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சிவக்குமார், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.வேளூர் வளர்மதி, கரிவேடு சரஸ்வதி, கரிக்கந்தாங்கல் பாரதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.