Month: September 2022

கழுதை பால் விற்பனை அமோகம்.

ஈரோடு செப், 19 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர் கழுதையை பராமரித்து அதில் இருந்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். குழந்தைகளுக்கு கழுதை பாலை கொடுத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கழுதை…

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தினை செய்தித்துறை அமைச்சர் மாலையிட்டு மரியாதை.

காஞ்சிபுரம் செப், 19 காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்து பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி…

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். தரிசனம் செய்ய பல மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி‌ செப், 19 புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர்.…

ராகுல் காந்திக்கு ஆதரவாக தீர்மானம். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்.

ஜெய்ப்பூர் செப், 19 ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இது தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். மேலும் ராகுல் காந்தியை கட்சியின்…

சமூக நீதி நாள் உறுதி மொழி. மாவட்ட ஆட்சியர் தலைமை.

நெல்லை செப், 19 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா நியமனம்.

சென்னை செப், 19 உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி செப்டம்பர் 12ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை…

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.

செங்கல்பட்டு செப், 19 செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 1987ம் ஆண்டு 108 சாதி மக்களுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்று தர உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம்…

மக்காச்சோளம் சாகுபடி. விவசாயிகள் ஆர்வம்.

அரியலூர் செப், 19 அரியலூர் மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக உடையார்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பருத்தி, முந்திரி சாகுபடி செய்த விவசாயிகளும் தற்போது மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம்…

11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு.

விருதுநகர் செப், 19 அருப்புக்கோட்டை அருகே 11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கல்வெட்டு கண்டெடுப்பு அருப்புக்கோட்டை வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜபாண்டி ஆகிய இருவரும் திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்புற கள ஆய்வு செய்தனர்.…

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.

திருவாரூர் செப், 19 திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டக் கூட்டம் திருவாரூரில் நடந்தது. சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.…