சென்னை செப், 19
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி செப்டம்பர் 12ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார்.
இந்நிலையில், நீதிபதி துரைசாமி நாளை மறுநாளுடன் ஓய்வுபெறும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த நீதிபதியான இவர், செப்டம்பர் 22ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.