திருவாரூர் செப், 19
திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டக் கூட்டம் திருவாரூரில் நடந்தது. சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் பேசினார். இதில் சிஐடியூ மாவட்டச் செயலாளர் முருகையன், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜானகிராமன், சிஐடியூ நிர்வாகிகள் மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.