திருவாரூர் செப், 20
நீடாமங்கலத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீடாமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தமிழ்ச்செல்வன், வீரையன், நீடாமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் நடராஜன், அவைத்தலைவர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசெயலாளர் ஷாஜஹான் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான சட்ட மன்ற உறுப்பினர் காமராஜ் கலந்துகொண்டு பேசினார். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோபால், கட்சியின் அமைப்புச்செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் சுதாஅன்புச்செல்வன், மன்னார்குடி நகர செயலாளர் குமார், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் குமாரசாமி மற்றும் தலைமைக்கழக பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசினர். முடிவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆதி.ஜனகர் நன்றி கூறினார்.