திருவாரூர் செப், 23
நீடாமங்கலம் தாலுகாவின் தலைநகரம். இங்கு மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள், வங்கிகள், ரயில் நிலையம், சிறு வணிக்கடைகள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நீடாமங்கலத்தில் தமிழக அரசின் பொதுநூலகத்துறை சார்பில் கிளை நூலகம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் கட்டிடம் உள்ளதால் வாசகர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
இந்த நூலகத்தில் ஆங்கிலம், தமிழ் நூல்கள் 34 ஆயிரம் உள்ளன. நீடாமங்கலம் நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 700 நூலக வாசகர்கள் உள்ளனர். 63 பேர் நூலக புரவலர்களாக உள்ளனர். நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த நூலகத்தில் போதுமான இடவசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவீன வசதிகளுடன் புதிய நூலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.