திருவாரூர் செப், 16
திருவாரூர் மாவட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவர்களுக்கான சேம நலநிதியை விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.