Month: September 2022

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதி மொழி.

திருவள்ளூர் செப், 19 திருவள்ளூர், தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர்…

உடுமலை திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவில் சிறப்பு பூஜை.

திருப்பூர் செப், 19 ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெறும். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கி நேற்று உடுமலை தளிசாலையில் பள்ளபாளையம் அருகே செங்குளம் கரைப்பகுதியில் அமைந்துள்ள உடுமலை…

பூட்டி கிடக்கும் கணினி வரி வசூல் மையம்

திருப்பத்தூர் செப், 19 திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் காய்கறி சந்தை உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி கணினி வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த…

ராணுவ உணவகத்தில் திடீர் தீ விபத்து.

திருச்சி செப், 19 ராணுவ உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல பொருட்கள் எரிந்து சேதமானது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே மேஜர்சரவணன் சாலையில் ராணுவ உணவகம் (பல்பொருள் அங்காடி) உள்ளது. இங்கு மதுபானங்கள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி…

நுகர்வோர் பேரவை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா.

தூத்துக்குடி செப், 19 தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் திருச்செந்தூர் தாலுகாவில் 1000 மரங்கள் நடவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் கட்ட தொடக்க விழா குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். ஆத்தூர் பஞ்சாயத்து…

வனத்துறை குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

தேனி செப், 19 கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டியில் வன ஊழியர்களுக்கு கடந்த 50 வருடங்களுக்கு முன்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதனால் அதன் அருகிலேயே புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதில் வன ஊழியர்கள் குடியிருந்து…

புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி வெறிச்சோடிய மீன் மார்க்கெட்.

தஞ்சாவூர் செப், 19 புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலர் விரதம் இருந்து பெருமாள் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் இந்த ஒரு மாதம் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, சைவ உணவுகளை மட்டுமே அவர்கள் உண்பார்கள். இதனால் இந்த ஒரு மாதத்தில் அசைவ…

பட்டா மாறுதல் சிறப்பு முகாம்.

சிவகங்கை செப், 19 காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி வளாகத்தில் ஜி.ஆர். பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஜி.ஆர். பட்டா பிரிவு வட்டாட்சியர் ராஜா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். பள்ளத்தூர் பேரூராட்சி…

அன்னவாசல் அருகே பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு.

புதுக்கோட்டை செப், 18 அன்னவாசல் ஒன்றியம் ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் இலுப்பூர் வருவாய் அலுவலர் குழந்தைசாமி தலைமையிலான குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 52 சிறுவர்-சிறுமிகள் அருகே உள்ள வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதை…

மாவட்ட மைய அளவிலான தடகள போட்டி 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

சேலம் செப், 18 பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட மைய அளவிலான தடகள விளையாட்டு போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.…