தஞ்சாவூர் செப், 19
புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலர் விரதம் இருந்து பெருமாள் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் இந்த ஒரு மாதம் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, சைவ உணவுகளை மட்டுமே அவர்கள் உண்பார்கள். இதனால் இந்த ஒரு மாதத்தில் அசைவ உணவுகளான மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றின் விற்பனை குறையும்.
கொண்டிராஜபாளையம் அருகே உள்ள தற்காலிக மீன்மார்க்கெட்டில் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்வாங்குவதற்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமான கூட்டம் இல்லை. இதனால் மீன்கள் விற்பனை பாதியாக குறைந்தது.