அரியலூர் செப், 19
அரியலூர் மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக உடையார்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பருத்தி, முந்திரி சாகுபடி செய்த விவசாயிகளும் தற்போது மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மக்காச்சோளம் சாகுபடி செய்தால் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மேலும் உடையார்பாளையம் பகுதியில் தற்போது மக்காச்சோளப்பயிர்கள் நன்கு வளர்ந்து, பூக்கள் பூத்துள்ளது. சில நாட்களில் கதிர்கள் வெளிப்படும் நிலையில் உள்ளது. இரட்டிப்பு லாபம் மக்காச்சோளக்கதிர்கள் வளர்ந்தபின்னர் விவசாயிகள் அவற்றை அறுவடை செய்து, சோளத்தை தனியாக பிரித்து சாலையோரங்களில் காயவைத்து, பின்னர் விற்பனை செய்வார்கள். வயல்வெளி பகுதிகளுக்கு வியாபாரிகள் வந்து எடைபோட்டு மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து கொண்டு செல்வார்கள்.
இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. மக்கச்சோளத்தை மாவாக்கி மாட்டுத்தீவனமாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது