Month: September 2022

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க 2 நாள் சிறப்பு முகாம்.

நெல்லை செப், 23 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடிகளிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம்…

அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை.

நெல்லை செப், 23 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் திறந்து வைத்தார். பின்னர் நெல்லை டவுனை அடுத்துள்ள குன்னத்தூரில் நாங்குநேரி சட்டமன்ற…

17 மகளிர் குழுக்களுக்கு ரூ.46 லட்சம் கடன்உதவி.

தஞ்சாவூர் செப், 23 மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 17 மகளிர் குழுக்களுக்கு ரூ.46 லட்சம் கடன்உதவியை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். தஞ்சை சிந்தாமணி நியாயவிலைக்கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், விற்பனை முனைய கருவியின் செயல்பாடு…

நீடாமங்கலத்தில் நவீன வசதிகளுடன் புதிய நூலகம் கட்ட வாசகர்கள் கோரிக்கை.

திருவாரூர் செப், 23 நீடாமங்கலம் தாலுகாவின் தலைநகரம். இங்கு மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள், வங்கிகள், ரயில் நிலையம், சிறு வணிக்கடைகள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நீடாமங்கலத்தில் தமிழக அரசின் பொதுநூலகத்துறை சார்பில் கிளை நூலகம்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்.

கீழக்கரை செப், 23 தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்…

பூண்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக புதிய டிரான்ஸ்பார்மர்கள்.

திருவள்ளூர் செப், 23 திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீரான மின்சார வினியோகம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை…

சேர்க்காடு சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன தணிக்கை.

வேலூர் செப், 23 தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள்…

அரசு பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.

விழுப்புரம் செப், 23 விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அடுத்த வெங்கமூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று மதியம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அந்த…

2 ஆண்டுகளுக்கு பிறகு யஷ்வந்த்பூர்- ஓசூர் இடையே மின்சார ரெயில் மீண்டும் இயக்கம். பொதுமக்கள் மகிழ்ச்சி.

கிருஷ்ணகிரி செப், 23 கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் யஷ்வந்த்பூர்- ஓசூர் இடையேயான மின்சார ரயில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இதனால் நாள்தோறும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு பணிக்கு செல்வோர், வியாபாரிகள் அவதியடைந்தனர். தற்போது கொரோனா…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்.

கரூர் செப், 23 கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பணி வழங்க நடவடிக்கை எடுக்க…