கரூர் செப், 23
கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திட்ட பணிகளை ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை வைத்து பேசினர். இதில், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.