கரூர் செப், 22
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் உணவு தானிய உற்பத்தி குறித்தும், விதை மற்றும் உரங்கள் இருப்பு குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் குறித்தும், பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்தும், பிரதமரின் விவசாயி கவுரவ நிதி குறித்தும், மாநில வேளாண் அபிவிருத்தி திட்டம் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் இதர திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து விவசாயிகளுக்கு பயனுள்ளதாக செயல்பட வேண்டும் என்றார். இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.