Month: September 2022

பிரதமர் வீடு வழங்கும் திட்ட பணிகளை 2 வாரத்துக்குள் தொடங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

ராணிப்பேட்டை செப், 23 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 288 கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் காலதாமதங்கள் குறித்து ஊரக வளர்ச்சித்…

அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.

திருப்பூர் செப், 23 திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு 102 ஆம்புலன்ஸ் சேவையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவை தாராபுரம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை…

ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு.

புதுச்சேரி செப், 23 ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை ஜிப்மரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்.சரவணன்குமார் மற்றும்…

திலீப் டிர்க்கி இந்திய ஆக்கி தலைவர் பதவிக்கு இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி செப், 23 முன்னாள் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் திலீப் டிர்க்கி இந்திய ஆக்கி தலைவர் பதவிக்கு இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச ஆக்கி தலைவரான ராகேஷ் கத்யால் மற்றும் ஜார்கண்ட் ஆக்கி தலைவர் போலாநாத்…

சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகருக்கு விஜய் சேதுபதி உதவி.

சென்னை செப், 23 தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதனிடையே நடிகர் போண்டா…

சாலை பணியை சீரமைக்ககோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டம்.

நாமக்கல் செப், 23 பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லைமேடு பகுதியில் உள்ள மங்கலமேட்டில் புதிதாக சாலை அமைக்க ஏற்கனவே போடப்பட்டிருந்த தார் சாலையை பெயர்த்து எடுத்தனர். இந்தநிலையில் சாலையில்ஜல்லி கற்களை கொட்டி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தார் சாலை…

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அறுவடை எந்திரம் வழங்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்.

நாகப்பட்டினம் செப், 23 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழையூர் ஒன்றியக்குழு கூட்டம் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் மாசேத்துங் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு பயிற்சி உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

குவாரி முறைகேடுகளில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் தண்டனை‌.

மதுரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த திசைவீரபாண்டியன், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா, மங்கலம் கிராமத்தில் உள்ள மலட்டாற்று பகுதியில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இப்பகுதி…

அதிக பாரம் ஏற்றிய லாரிகளுக்கு அபராதம்.

கன்னியாகுமரி செப், 23 கொற்றிக்கோடு துணை ஆய்வாளர் ரசல்ராஜ் மற்றும் காவல் துறையினர் சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 11 லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து…

வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 23 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், புதிய வீட்டு குடிநீர் இணைப்புகள், மற்றும் பள்ளி அங்கன்வாடி மையத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்கள், ஊராட்சியில்…