திருப்பூர் செப், 23
திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு 102 ஆம்புலன்ஸ் சேவையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவை தாராபுரம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் 102 ஆம்புலன்ஸ் தாய்சேய் நல இலவச சேவையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் சத்யராஜ், திமுக. நகர செயலாளர் முருகானந்தம், நகர தலைவர் கதிரவன், துணை செயலாளர் வெ. கமலக்கண்ணன், நகர செயலாளர் தனசேகர் மற்றும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.