திருப்பூர் செப், 21
தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்லடம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் பல்லடம் பேருந்து நிறுத்தம் உட்புறம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் ஆட்டோ இயக்கி வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் பலரும் பங்கேற்றனர். முறையான ஆவணங்கள் வைத்திருப்பது, பயணிகளுடன் நல்லுறவை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல், ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே ஏற்படும் மோதல்களை தவிர்த்தல், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தருதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வை வட்டார போக்குவரத்து அதிகாரி எடுத்துரைத்தார். இதில் தெற்கு வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர், பல்லடம் காவல்துணை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.