திருப்பூர் செப், 20
குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா, குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் தலைமை தாங்கினார். விழாவில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவசெந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குண்டடம் வட்டார மருத்துவர் மனோகரன் அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட 90 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிைச தட்டு, ஜாக்கட் பிட், சேலை, வளையல், மஞ்சள் குங்குமம், மாலை இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட பொருட்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கி பேசினார்.
இதில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன், பேரூர் கழக செயலாளர் அன்பரசு, பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், இளைஞரணி அமைப்பாளர் ராணா பத்மநாபன், குண்டடம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன் பாலகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது.