கன்னியாகுமரி செப், 23
கொற்றிக்கோடு துணை ஆய்வாளர் ரசல்ராஜ் மற்றும் காவல் துறையினர் சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 11 லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரிகளை எடைமேடைக்கு கொண்டு சென்று சோதனை செய்தபோது கூடுதல் எடைக்கு ஏற்ப அபராதம் விதித்தனர். அதன்படி 2 லாரிகளுக்கு தலா ரூ.26 ஆயிரம் வீதமும், 9 லாரிகளுக்கு தலா ரூ.24 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் விதித்தனர். அத்துடன் இனி மேலும் அதிக பாரம் ஏற்றக்கூடாது என லாரி உரிமையாளர்களை எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.