சென்னை செப், 23
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இதனிடையே நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, போண்டாமணியின் மருத்துவ உதவிக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இது குறித்து போண்டாமணி கூறியதாவது, ” கேட்டவுடனே நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பணத்தை வங்கி எண்ணிற்கு போட்டுவிட்டார் அவர் கொடுத்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் பார்த்திபன், போன் மூலம் தொடர்புக் கொண்டு போண்டாமணியை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். மேலும், வடிவேலு உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.