நாகப்பட்டினம் செப், 23
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழையூர் ஒன்றியக்குழு கூட்டம் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் மாசேத்துங் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு பயிற்சி உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கீழையூரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மருந்தகம் தற்போது செயல்படாமல் உள்ளது. தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருவதால் கீழையூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டும்.
மேலும் தற்போது குறுவை சாகுபடி அறுவடை தீவிரமடைந்து வருகிறது. தனியார் அறுவடை எந்திரங்களுக்கு மணிக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3500 வரை வாடகை பெறப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வேளாண்மை துறை மூலம் குறுவை அறுவடைக்கு குறைந்த வாடகையில் விவசாயிளுக்கு அறுவடை எந்திரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.