நாகப்பட்டினம் செப், 21
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை சட்டமன்ற தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாகையில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும், மேலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும். தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் நாகையில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க வேண்டும். ஈ.சி.ஆர். சாலையில் நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். நாகை அரசு பொது மருத்துவமனை மற்றும் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது, மறைமலை அடிகள் பெயரில் நவீன கலையரங்கம் கட்ட வேண்டும். நாகையில் உள்ள நூலகங்கள் மற்றும் அரசுப் பள்ளி கட்டிடங்களை புதுப்பித்து கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட நாகை தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன என அவர் கூறினார்.