Month: August 2022

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் ஆக, 31 காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடி நியமனம் மேற்கொள்ளும்போது மேற்கண்ட பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்க…

தமிழ்நாடு சைக்கிள் லீக் போட்டி. அமைச்சர் மெய்யநாதன் தலைமை

காஞ்சீபுரம் ஆக, 31 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டையில் அமைந்துள்ள சென்னை இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நிப்பான் பெயிண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு சைக்கிள் லீக் சார்பாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சைக்கிள் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் நம்ம…

கொரோனா‌ தொற்று அதிகரிப்பு. பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு ஆக, 31 ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து…

கனமழை காரணமாக கொடைக்கானல்-பழனி பிரதான சாலை பாதிப்பு.

கொடைக்கானல் ஆக, 31 கொடைக்கானலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், பழனி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானலின்…

மேல்நிலைப் பள்ளிகளில் மாரத்தான் போட்டி.

விருத்தாசலம் ஆக, 31 வேப்பூர் அடுத்த திருப்பர் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மராத்தான் போட்டி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, கல்விக்குழும நிர்வாக இயக்குனர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இயக்குனர் தினேஷ் முன்னிலை வகித்தார். திட்டக்குடி காவல் துறை கண்காணிப்பாளர் காவ்யா…

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

கடலூர் ஆக, 31 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடலூர் உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில்…

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

கேரளா ஆக, 31 மூணாறு, இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே குடையாந்தூரில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையடிவாரத்தில் இருந்த வீடு நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் அப்படியே புதைந்து போனது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில்…

சிம்பு இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன்.

சென்னை ஆக, 31 கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில்…

அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம்.

நெல்லை ஆக, 31 திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகிதலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

மருத்துவமனையில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்த நடிகை ராதிகா.

சென்னை ஆக, 31 ரஜினி, கமல் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்கி இயக்குனர் இமயம் என்ற பெயரினை பெற்றவர் பாரதிராஜா. தற்போது படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார்.…