விருத்தாசலம் ஆக, 31
வேப்பூர் அடுத்த திருப்பர் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மராத்தான் போட்டி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்விக்குழும நிர்வாக இயக்குனர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இயக்குனர் தினேஷ் முன்னிலை வகித்தார். திட்டக்குடி காவல் துறை கண்காணிப்பாளர் காவ்யா துவக்கி வைத்தார்.நல்லுார் அரசு பள்ளியில் இருந்து துவங்கி, ஏரி வரை தொடர் ஓட்டம் நடந்தது. பள்ளி முதல்வர் ரேவதி, ஆசிரியர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். அதில், மராத்தான் ஓட்டம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்கள், பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.